Pin Selluvean En Meetparae – பின் செல்வேன் என் மீட்பரே

Deal Score0
Deal Score0

பல்லவி

பின் செல்வேன் என் மீட்பரே – நானும்மைப்
பின் செல்வேன் என் மீட்பரே

அனுபல்லவி

நான் செய்த பாவங்கள் நின் தயவால் தீர
நாதா ஜீவன் விட்டாய் வன் குருசில் அதால்

சரணங்கள்

1. என் சிலுவையை எடுத்தேன் – எல்லாம் விட்டு
என்றும் நின்னையே அடுத்தேன்
நின் திருப்பாதத் தடங்களை நோக்கி நான்
நித்தமும் சென்று உம் சித்தம் என்றும் செய்து – பின்

2. சிங்கம்போல கெர்ச்சித்தே – எந்தன் நேசரே
சீறி மிக வெதிர்த்தே
கங்குல் பகலும் தீ அம்பு என்மேல் எய்யும்
கடியின்மேல் ஜெயம் பெற்று அடியேன் நின்னருள் பெற்று – பின்

3. நெருக்கஞ் செய்தால் மனுஷர் – அதென்னை உன்
நெஞ்சண்டை யோட்டுவதாம்;
கருக்கான சோதனை கடினமாய் வதைத்தாலும்
உருக்கமுள்ளோனே! உனை ஒருபோதுமே விடேன் – பின்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo