Piriyamaana Yesuvae – பிரியமான இயேசுவே

Deal Score0
Deal Score0

1.பிரியமான இயேசுவே,
என் நெஞ்சைத் தயவாக
நீர் பூரிப்பாக்கி, என்னிலே
மிகுந்த நிறைவாக
தெய்வீக அன்பை ஊற்றியே,
பேரருள் தந்த உம்மையே
நான் துதிசெய்வேனாக.

2.என் நெஞ்சில் உம்மால் பற்றின
அன்பென்னும் தீ எரியும்;
என் மனதும்மால் உத்தம
மகிழ்ச்சியை அறியும்;
நான் உம்மை நோக்கும் போதெல்லாம்,
என் துக்கம் உம்மிலே உண்டாம்
அருளினால் தெளியும்.

3.நீர் என் வெளிச்சம்; உம்மால்
திறந்த முகமாக நான்
பிதாவின் இன்ப நெஞ்சைத்தான்
என் ஆறுதலுக்காக
கண்ணோக்கும்போது, தயவாய்
நீர் என்னை நீங்கா ஜோதியாய்
பிரகாசிப்பிப்பீராக.

4.நீர் மோட்சத்துக்குப் போம் வழி;
உனக்குள்ளான யாரும்
தப்பிப் போகார்; ஆ, இந்நெறி
விலகினோர் எல்லாரும்
கெட்டழிந்து போவார்களே;
வழியாம் ஸ்வாமீ, உம்மிலே
நிலைக்க என்னைக் காரும்

5.நீர் சத்தியம்; நான் உம்மையே
தெரிந்து கொண்டிருப்பேன்;
மாறா மெய்ப்பொருள் நீரே,
வீண் மாய்கையை வெறுப்பேன்;
உம்மாலே பாக்கியம் வரும்;
மெய்யே, என் நெஞ்சை என்றைக்கும்
நான் உமக்கே படைப்பேன்.

6. நீர் ஜீவன்; என்னை நீர் நீரே
பலத்தால் இடைகட்டும்;
திடன் இல்லா அந்நேரமே
என் நெஞ்சில் ஊக்கம் தாரும்,
தெய்வீக ஜீவன் என்னிலே
மென்மேலும் வளர்ந்தோங்கவே
நல்லாவியாலே காரும்.

1.நீர் ஜீவ அப்பம்; பஞ்சத்தில்
உம்மால் என்பசி ஆறும்;
நான் போம் வனாந்தரங்களில்
என் உள்ளம் உம்மை நாடும்;
பிதாவின் ஈவாய் மன்னாவே,
நீர் என்னைப் பாவ இச்சைக்கே
விலக்கிக் காத்துக் கொள்ளும்.

2.நீர் ஜீவ ஊற்று; உம்மாலே
என் ஆத்மத் தாகம் தீரும்;
நீர் தரும் ஈவு நித்தமே
சுரக்கும் தண்ணீராகும்;
நீரூற்றாய் என்னில் ஊறுமேன்,
நிறைவாய் நித்தம் தாருமேன்
ஆரோக்கியமும் சீரும்.

3.நீர் என்னை ஜோடிக்கும் உடை,
நீர் என் அலங்கரிப்பு;
நான் உம்முடைய நீதியை
அணிவதென் விருப்பு;
பூலோகத்தின் சிங்காரமாம்
விநோத சம்பிரமம் எல்லாம்
என் ஆவிக்கு வெறுப்பு.

4. நீர் நான் சுகித்து தங்கிடும்
அரண்மனையும் வீடும்;
புசல் அடித்தும் விருதா,
பேய் வீணாய் என்னைச் சீறும்;
நான் உம்மில் நிற்பேன், ஆகையால்
கெடேன்; பொல்லார் எழும்பி
நீர் என் வழக்கைத் தீரும்.

5.என் மேய்ப்பராய் இருக்கிறீர்,
என் மேய்ச்சலும் நீர்தாமே;
காணாமல் போன என்னை நீர்
அன்பாக மீட்போராமே;
இவ்வேழை ஆட்டை என்றைக்கும்
நீர் விலக விடாதேயும்
நான் உம்முடை யோனாமே.

6.நீரே நான் என்றும் வாஞ்சிக்கும்
மா நேசமுள்ள நாதர்;
நீரே என் ஆசாரியரும்
பலியுமான கர்த்தர்;
நீர் என்னை ஆளும் ராஜாவும்
உம்மோடே எந்தப் போரிலும்
ஜெயிப்பேன், மா சமர்த்தர்.

1.நீர் உத்தம சிநேகிதர்
என் நெஞ்சும் மேலே சாயும்;
நீர் உத்தம சகோதரர்,
நீர் என்னைப் பார்க்கும் தாயும்,
நீர் நோயில் பரிகாரியே,
உம்மாலே ஆறிப்போகுமே
என் காயமும் விடாயும்.

2.படையில் நீர் சேனாபதி,
வில் கேடகம் சீராவும்;
கரும் கடலில் நீர் வழி
காண்பிக்கும் சமுக்காவும்;
எழும்பும் கொந்தளிப்பிலே
நீர் என் நங்கூரம், இயேசுவே,
நான் ஒதுங்கும் குடாவும்.

3.நீர் ராவில் என் நட்த்திரம்,
இருளில் என் தீவர்த்தி;
குறைவில் நீர் என் பொக்கிஷம்,
தாழ்விலே என் உயர்ச்சி;
கசப்பிலே என் மதுரம்;
நான் தொய்ந்தால் மீண்டும் என் மனம்
பலக்க, நீர் என் சக்தி.

4. நீர் ஜீவனில் விருட்சமும்,
நீர் செல்வங்கள் பொழியும்
பூங்காவனமும், என்றைக்கும்
சுகம் தரும் கனியும்;
முள்ளுள்ள பள்ளத்தாக்கிலே
என் ஆவிக்கு நீர், இயேசுவே,
குளிர்ந்த பூஞ்செடியும்.

5. நீர் துக்கத்தில் என் ஆறுதல்,
நீர் வாழ்வில் என் களிப்பு;
நீர் வேலையில் என் அலுவல்,
பகலில் என் சிந்திப்பு;
நீர் ராவில் அடைக்கலம்,
நீர் தூக்கத்தில் என் சொப்பனம்,
விழிப்பில் என் குறிப்பு.

6.ஆ, ஒப்பில்லாத அழகே!
நான் எத்தனை சொன்னாலும்
என் நாவினாலே கூடாதே;
நான் நாவினாலே கூடாதே;
நான் என்ன வாஞ்சித்தாலும்
அதெல்லாம் நீரே, இயேசுவே;
ஆ, தயவுள்ள நேசரே

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo