Pithavae Gnanam Anbinaal Lyrics – பிதாவே ஞானம் அன்பினால்

Deal Score0
Deal Score0

1. பிதாவே ஞானம் அன்பினால்
அனைத்தையும் படைத்தீர்;
ஏதேனிலே விவாகத்தால்
ஆண் பெண்ணையும் இணைத்தீர்
அப்பூர்வ ஆசீர்வாதத்தை,
இல்வாழ்க்கையின் நல்லின்பத்தை
இவர்களுக்கும் ஈயும்.

2. கானா ஊர் விருந்தாளியே,
இங்கே ப்ரசன்னமாகும்;
உம்தன் சம்பூரணத்தாலே
குறைவை நிறைவாக்கும்;
இவர்கள் இக இன்பமே
பரத்தின் பாக்கியமாகவே
நீர் மாறும்படி செய்யும்.

3. புனித ஆவி தேவரீர்
இவர்கள் மேலே ஊதும்;
உம் தூய்மை அன்பினாலும் நீர்
இவர்களைத் தற்காரும்;
எப்பாவத்துக்கும் நீங்கியே,
ஒரே சரீரம் போலவே
இவர்கள் வாழச் செய்யும்.

4. த்ரியேகா நீர் கட்டாவிடில்,
ப்ரயாசம் வீணே ஆகும்;
நீர் ஆசீர்வதிக்காவிடில்
இன்பமும் துன்பமாகும்;
உம்மால் இணைக்கப்பட்டோரை
குன்றாத நேசமுள்ளோரை
யார்தான் பிரிக்கக்கூடும்?

https://www.worldtamilchristians.com/yedheynil-aadhi-manam-lyrics-%e0%ae%8f%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo