புகழ்வோம் புகழ்வோம் – Pugalvom Pugalvom
புகழ்வோம் புகழ்வோம் – Pugalvom Pugalvom
1. புகழ்வோம் புகழ்வோம் – தினம் புகழ்ந்திடுவோம்
புண்ய நாதராம் இயேசுவையே – இந்த
பாரதத்தில் இரட்சண்ய சேனையார் – செய்த
பார் புகழ் சேவைகட்காய்
பல்லவி
அல்லேலூயா பாடி, சேனைக் கொடியுயர்த்தி
அன்பர் இயேசுவின் வீரர்களாய்
அவனியெங்கிலும் பவனி வருவோம்
அவர் செய்தியை உரைத்திடுவோம்
2. பாவத்திற்கடிமை ஆயிருந்த நாமும்
பரலோகினில் சேர்ந்திடவே
பரிசுத்தாவியால் எழுந்த சேனையார் – தம்மை
பலியாய் படைத்தனரே – அல்லேலூயா
3. தீண்டாமை நோயால், நாம் திண்டாடிய நேரம்
தீயோர் மத்தியில் நீதிக்கேட்டார்
தீச்சுடர் வீசிடும், மெழுகுவர்த்திப்போல்
தீய இருள் நீங்க தியாகமானார் – அல்லேலூயா
4. ஆன்ம சரீரக்கண்களைத் திறந்திட
ஆண்டுகள் நூறாய்ப் பணிபுரிந்த
ஆண்டவர் சேனைக்கு இரட்சண்ய சேனைக்கு
ஆனந்தமாக நன்றி சொல்வோம் – அல்லேலூயா
1.Pugalvom Pugalvom Thinam Pugalvom
Punya Naatharaam Yeasuvaiyae Intha
Paaraththil Ratchanya Seanaiyaar Seitha
Paar Pugal Sevaikatkaai
Alleluya Paadi Seanai Kodivuyarththi
Anbar Yeasuvin Veerarkalaai
Avaniyengilum Pavani Varuvom
Avar Seithiyai Uraithiduvom
2.Paavaththirkadimai Aayiruntha Naamum
Paraloginil Searnthidavae
Pariduththaaviyaal Eluntha Seanaiyaar Thammai
Paliyaai Padaithanarae
3.Theendaamai Nooyaal Naam Thindaadiya Nearam
Theeyor Maththiyil Neethikeattaar
Theesudar Veesidum Meluguvarththipoal
Theeya Irul Neenga Thiyagamaanaar
4.Aanma Samarreakangalai Thiranthida
Aadugal Nooraai Panipurintha
Aandavar Seanaikku Ratchanya Seanaikku
Aananthamagaa Nantri solluvom