Pullanaiyil Vandhu Pirandharae – புல்லணையில் வந்து பிறந்தாரே
புல்லணையில் வந்து பிறந்தாரே
பரலோக இராஜா இவர்
பூமியிலே வந்து ஜெனித்தாரே
விண்ணக மைந்தன் இவர் (2)
அவர் மேசியா அவர் இரட்சகர்
அவர் இம்மானுவேல் அவர் இயேசு (2)
– புல்லணையில்
சத்திரத்திலே இடமில்லையே
சர்வ வல்ல தேவனுக்கு
முன்னனையில் இடம் கொடுத்தார்
முன் குறித்த மன்னனுக்கு (2)
நீயும் உன்னையே கொடுத்திட ஆயத்தமா
சிறந்ததோர் கிறிஸ்மஸ் காணிக்கையாய் (2)
– அவர் மேசியா
நட்சத்திரமும் அறிவித்ததே
மேசியா பிறப்பதனை
சாஸ்திரியரும் விரைந்தனரே
பாலனை பணிந்திடவே (2)
நீயும் இயேசுவை அறிவிக்க ஆயத்தமா
மாந்தர்கள் அவர் நாமம் பணிந்திடவே (2)
– அவர் மேசியா
வெள்ளைப்போளமும் தூபவர்க்கமும்
ஞானியர் கொண்டு வந்தார்
வானம் பூமியும் படைத்தவர்க்கு
அது காணிக்கை ஆகிடுமா (2)
நீயும் உன்னையே கொடுத்திட ஆயத்தமா
சிறந்ததோர் கிறிஸ்மஸ் காணிக்கையாய் (2)
– அவர் மேசியா