Puththiyaai Nadanthu Vaarungal Lyrics – புத்தியாய் நடந்து வாருங்கள்

Deal Score+1
Deal Score+1

Puththiyaai Nadanthu Vaarungal Lyrics – புத்தியாய் நடந்து வாருங்கள்

புத்தியாய் நடந்து வாருங்கள் – திருவசனப்
பூட்டைத் திறந்து பாருங்கள்

அனுபல்லவி

சத்தியத்தைப் பற்றிக்கொண்டு,
தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு,
நித்தமும் ஜெபம், தருமம்,
நீதி செய்து, பாடிக்கொண்டு – புத்தி

சரணங்கள்

1. ஆருடைய பிள்ளைகள் நீங்கள்? – திரு உரையில்
அறிந்து உணர்ந்து பாருங்கள்
சீருடைய தெய்வப் பிள்ளைகள் – நீங்கள் ஏதித்த
தித்தரிப்பு செய்யும் வகைகள்?
கூருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம்
நேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே –புத்தி

2. ஆவியை அடக்காதிருங்கள்; – மறை சொல்லுவதை
அசட்டை செய்யாமல் பாருங்கள்
ஜீவனை அடையத் தேடுங்கள் – யேசுக் கிறிஸ்தின்
சிந்தையைத் தரித்துக் கொள்ளுங்கள்
மேவியே ஜெபம், மன்றாட்டு, விண்ணப்பம், வேண்டுதலோடு
தாவி, யேசுவைப் பிடித்துத் தளரா நடையோடுன்னிப் -புத்தி

3. ஏசுக் கிறிஸ்தையன் பதத்தைத் – துதித்துப் போற்றி,
இன்பமாய்ச் சத்திய வேதத்தை
வாசித்து ஆராய்ந்து, நலத்தைப் – பிடித்துளத்தில்
வைத்துக் கொண்டு, இவ்வுலகத்தை
நேசியாமல் பிழைத்துங்கள் நித்திய ரட்சிப்பைத் தினம்
ஆசையோடு தேடி, நீங்கள் அடையும்படி முற்றிலும் -புத்தி

4. பரிசுத்த கூட்டம் அல்லவோ? – நீங்கள் எல்லாரும்
பரன் மகன் தேட்டம் அல்லவோ?
தரிசிக்க நாட்டம் அல்லவோ? – கிறிஸ்தின் உள்ளம்
தன்னிலே கொண்டாட்டம் அல்லவோ?
புரிசனை செய்தவர் பொற்பாதத்தை மனதில் உன்னிக்
கரிசனை யோடு தேடிக் காணத் தீயோன் நாணப் படிப் -புத்தி

Puththiyaai Nadanthu Vaarungal Lyrics in English

Puththiyaai Nadanthu Vaarungal Thiruvasana
Poottai Thiranthu Paarungal

Saththiyaththai Pattri Kondu
Thannai Suththi Pannikondu
Niththamum Jebam Tharumam
Neethi Seithu Paadikondu

1.Aarudaiya Pillaigal Neengal Thiru Uraiyil
Arinthu Unarnthu Paarungal
Seerudaiya Deiva Pillagal Neengal Yeathitha
Thitharippu Seiyum Vagaikal
Koorudan Mei Thirumarai Kuriththu Solvathai Thinam
Nearudan Aaraainthu Paarththu Niththiya Ozhiyil Thaanae

2.Aaviyai Adakkathirungal Marai Solluvathai
Asattai Seiyaamal paarungal
Jeevanai Adaiya Theadungal Yesu Kiristhin
Sinthaiyai Thariththu Kollungal
Meaviyae Jebam Mantraattu Vinnappam Veanduthalodu
Thaavi Yesuvai Pidiththu Thalaraa Nadaiyodunni

3.Yeasu Kiristhaiyan Pathaththai Thuthithu Pottri
Inbamai Saththiya Vedhaththai
Vaasiththu Aarainthu Nalaththai Pidiththulaththil
Vaiththu Kondu Evvulagaththai
Neasiyaamal Pilaiththungal Niththiya Ratchippai Thinam
Aasaiyodu Theadi Neengal Adaiyumpadi Muttrilum

4.Parisuththa Koottam Allavo Neengal Ellarum
Paran Magan Theattam Aallavo
Tharisikka Naattam Allavo Kiristhin Ullam
Thannilae Kondattam Allavo
Purisanai Seithavar Por Paathathai Manathil Unni
Karisanai Yodu Theadi Kaana Theeyoan Naana Padi

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo