Sathiratthilae siru idam song lyrics – சத்திரத்திலே சிறு இடமுந்தான்

Deal Score0
Deal Score0

Sathiratthilae siru idam song lyrics – சத்திரத்திலே சிறு இடமுந்தான்

பல்லவி:
சத்திரத்திலே சிறு இடமுந்தான் உண்டோ
தங்கிச் செல்கிறோம் இன்றிரவு மாத்திரம் (2)

அனுபல்லவி:
வா…டைக் காற்றிதோ…
ஜில்லென்று காதைத் துளைக்குதே… (2)

  1. நீண்ட பயணமாக நாசரேத் முதல் – நாங்கள்
    மன்னன் கட்டளையை நிறைவேற்றவே (2)
    மெள்ள மெள்ளவே கால்கள் நோகவே
    பெத்லகேம் மட்டும் நாங்கள் வந்து சேர்கின்றோம் (2) – சத்திரத்திலே சிறு
  2. காலை வைக்கக்கூட இடைவெளி இல்லை – சற்று
    காலைவரை நீங்கள் பொறுக்கக்கூடுமா? (2)
    அந்த ஓரமாய் சின்னஞ்சிறியதாய்
    மாட்டுக் கொட்டில் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள் (2)

சத்திரத்திலே இடம் கொஞ்சமுமில்லை
மாடு தங்கிடும் கொட்டில் தானுண்டு

  1. போதும் எமக்கு போதும் இதுவே – நீங்கள்
    செய்த உதவி சாலப் பெரிதே (2)
    தேவன் பெரியவர் போற்றிப் புகழுவோம் – அவர்
    பாதைகள் என்றும் வினோதமானதே! (2)

மாட்டுக் கொட்டிலில் சிறு இடமும் கிடைத்ததே
தங்கிச் செல்லுவோம் இன்றிரவு மாத்திரம்

அனுபல்லவி:
வா…டைக் காற்றிதோ…
ஜில்லென்று காதைத் துளைக்குதே… (2)

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    god medias
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo