
Siluvaiyae Nalmaramae – சிலுவையே நல்மரமே
Siluvaiyae Nalmaramae – சிலுவையே நல்மரமே
சிலுவையே நல்மரமே
அதன் நிழல் அடைக்கலமே
கலங்காதே அழுதிடாதே
இயேசு உன்னை அழைக்கிறார்
1. துன்ப நெருக்கடியில்
சோர்ந்து போனாயோ
அன்பர் இயேசு பார்
உன்னை அணைக்கத் துடிக்கின்றார்
2. பாவச் சேற்றினிலே
மூழ்கி தவிக்கின்றாயோ
இயேசுவின் திருரத்தம்
இன்றே கழுவிடும்
3. வியாதி வேதனையில்
புலம்பி அழுகின்றாயோ
இயேசுவின் காயங்களால்
இன்றே குணம் பெறுவாய்