SILUVAIYIL ARAIYUNDA MESSIAH – சிலுவையில் அறையுண்ட மேசியா
SILUVAIYIL ARAIYUNDA MESSIAH – சிலுவையில் அறையுண்ட மேசியா
சிலுவையில் அறையுண்ட மேசியா
இறை வல்லமையும் இறை ஞானமுமாய் உள்ளார்
இதை உள்ளங்கள் உணர்ந்திடட்டும்
இந்த உலகமும் உணர்ந்திடட்டும் (2)
அல்லேலூ அல்லேலூ அல்லேலுயா (4)
1. குற்றம் இல்லாதோர் மாய்கின்றார்
எம் குழந்தைகள் பசியில் வாடுகின்றார்
நீதியை அழிப்போர் வாழ்கின்றார்
பல நேரிய மனிதர்கள் வீழ்கின்றார்
இந்த சிலுவை உமது வல்லமையோ
இந்த சிலுவை உமது ஞானமோ (2) — அல்லேலூ
2. சிலுவையில் இறந்த செம்மறிதான்
பின் சாவினை அழித்து உயிர்த்ததன்றோ
சிலுவை வடிவே முடிவல்ல
முழு ஜெயமே எங்கள் பரிசன்றோ
இந்த சிலுவை உமது வல்லமையே
இந்த சிலுவை உமது ஞானமே (2) — அல்லேலூ
3. நெஞ்சினில் அமைதியை இழக்கின்றோம் – மன
நிம்மதி இழந்தே தவிக்கின்றோம்
நோவிலும் சாவிலும் துடிக்கின்றோம் – எங்கள்
தேவனே சிலுவையின் பொருள் சொல்வாய்
இந்தச் சிலுவை உமது வல்லமையோ
இந்தச் சிலுவை உமது ஞானமோ (2) — அல்லேலூ
4. உறவுகள் நிறைவு தருவதில்லை எங்கள்
உள்ளத்தில் அன்பு வளர்வதில்லை
பிரிவுகள் பிளவுகள் பிணக்குகளே எங்கள்
வீட்டிலும் நாட்டிலும் வளர்வது ஏன்
இந்தச் சிலுவை உமது வல்லமையோ
இந்தச் சிலுவை உமது ஞானமோ (2) — அல்லேலூ