சிந்துதே சிலுவையில் – SINTHUTHEA SILUVAIYIL
சிந்துதே சிலுவையில் இரத்தமாய்
காயங்களால்
முள்முடி தலையிலே குடையுதே
வேதனையால்
தள்ளாடிடும் உந்தன் பாதங்களே
தோளில் சுமந்தீரே
பார சிலுவையை
எனக்காய்
ஏன் உம் மேல் இத்தனை பாடுகள்
நான் வாழவே
சாட்டைகளால் அடிக்க
பரிகாசம் சூழ
உம் இதயம் உடைந்தே
துடிக்கின்றதே
ஆணிகளும் பாய
இரத்த வெள்ளம் ஓட
துரோகிகளும் மன்னித்திட
வேண்டி நின்றீரே
கள்ளர் மத்தியில் கபடில்லாமல்
பாவியின் கோலம் ஏற்றீரே
ஏன் உம் மேல் இத்தனை பாடுகள்
நான் வாழவே
தாகம் கொண்டீர் எனக்காய்
காடியினால் ஏமாற்றம்
இழந்ததை பெற்றுக்கொள்ள
ஏற்றுக்கொண்டீரே
உறவுகள் ஓட
அந்தகாரம் சூழ
சித்தம் செய்ய உயிர் ஈந்தீர்
அன்பின் ஆழமே
உந்தன் தியாகம் போல்
ஏதும் இல்லையே
சாவின் தியாகம்
ஏற்றீரே
ஏன் உம் மேல் இத்தனை பாடுகள்
நான் வாழவே-சிந்துதே