
Tamil Christian Songs lyrics Mashup Eleven
Tamil Christian Songs lyrics Mashup Eleven
01. நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க-
பாகாலின் படைகளை எதிர்திடுவேன்
நான் ஜெபிக்க ஜெபிக்க
அவர் தலை அசைப்பார்
நெருப்பாய் இறங்கிடுவார்-என் தெய்வம்
02. செங்கடல் கண்டு பயப்படல
வழிவிடும் வரைக்கும் WAIT பண்ணல
இயேசுவின் வல்லமை எனக்குள்ளே
எழுந்து நடப்பேன் கடலின் மேலே
– துதிக்கு பாத்திரர் நீரல்லவோ
மகிமைக்கு பாத்திரர் எந்தன் இயேசு
03.பலம் உள்ளதை கண்ணோக்காமல்
பலவீனன் என்னை தெரிந்து கொண்டீர்.
விலையேறப்பெற்ற உம் கிருபையினால்
இன்று உமக்காய் வாழ்கிறோம் ஆண்டவரே
– அல்லேலூயா – இன்று அவரை நாம் துதிப்போம்\போற்றுவோம்
04. தேவனால் பிறந்தவன் எவனுமே
உலகத்தை ஜெயிப்பவன்
என்றுமே
மலைகளையும் பதர் ஆக்குமே
என் தேவனே – யேகோவே யீரே
05. உனக்கு விரோதமாய் எழும்புவார்கள்
ஆனாலும் உன்னை மேற்க்கொள்ள முடியாது – 2
உன்னை காத்திட உன்னோடு இருக்கின்றார்
உன் தலையை உயர்த்திடுவார் – 2
– நன்றி தகப்பனே – நன்றி இயேசைய்யா
வெட்கப்பட்டு போவதில்லை..
06. வானத்தையும் பூமியையும்
உண்டாக்கின தேவன்
நட்சத்திரங்களை பெயர்
சொல்லி அழைத்த தேவன்
– உமக்கு சிலைகள் இல்லையே
-உம் கையில் ஆயுதம் இல்லையே
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
உமக்கொப்பான தேவனில்லை.
07. மேகத்தில் வருவீர் வேகமாய் வருவீர்
என்னையும் சேர்த்துக் கொள்வீர்
என் கண்ணீர் துடைப்பீர்
உம்மோடு இணைப்பீர்
– மாரநாதா மாரநாதா
எந்தன் பொக்கிஷம் நீர்தானையா
எந்தன் புகலிடம் நீர்தானையா
இயேசுவே என் இதயத்தில் வாழ்பவரே
எந்தன் இதயத்தை ஆள்பவரே
08. உம்மை நம்பும் மனிதர்கள் யாவரையும்
உம் கிருபை சூழ்ந்து கொள்ளும்
உம்மை நம்பும் மனிதர்கள் யாவருக்கும்
உம் நன்மை மிகுந்திருக்கும் – 2
குற்றப்பட்டுப் போவதில்லை
நான் வெட்கப்பட்டுப் போவதில்லை – 2
– உம்மை நம்பும் பாக்கியவான்
உம்மையே நம்பி இருப்பேன்
உம் அன்பை நம்பும் நான் பாக்கியவான்
உம் அன்பையே நம்பி இருப்பேன்
09. எப்பத்தா என்று சொன்னாரே
எதையும் செய்திடுவாரே
கல்லறை முன் அவர் இருக்க
மரணமும் தலை குனியும்
– மரித்தகாரியம் மறுபடி நடக்கும்
முடிந்த காரியம் முற்றிலும் மாறும்.
10. துதிக்கின்றோம் உம்மை
பரலோக தேவனே
குமாரன் இயேசுவே
எனக்குள் ஆவியாய் இருப்பவரே!