Thakappanae Unthan – தகப்பனே உந்தன்
தகப்பனே உந்தன்
தயை கொண்ட அன்பால்
தழுவி என்னை தாங்குமே-2
தயங்கிடும் நேரத்தில்
தேவா உந்தன்
தோளில் சுமந்திடுமே-2
கர்த்தாவே நான் நிலையற்றவன்(ள்)
என் கால்களை ஸ்திரப்படுத்தும்-2
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை வாஞ்சிக்கிறேன்
வழிகாட்டும் தீபம்
(என்) துணையாளரே
தேற்றும் தெய்வமே-2
அன்பால் பெலத்தால்
அனல்மூட்டும் ஐயா
அபிஷேக நாதரே-2
நான் ஒருபோதும் உன்னை
கைவிடுவதில்லை
என்றுரை செய்தேனன்றோ-2
கடல் ஆழத்திலும்
அக்கினி சூளையிலும்
உன்னை காத்திடும்
பெலவானன்றோ
விஷ சர்ப்பங்களோ
சிங்க கூட்டங்களோ
பயம் வேண்டாம்
உன் அருகில் நான்
என்றுரை செய்தவரை
ஆராதிப்போம்
ஆவியில் ஆராதனை-2
கர்த்தாவே நான் நிலையற்றவன்(ள்)
என் கால்களை ஸ்திரப்படுத்தும்-2
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை தேடுகிறேன்
என் பெலனும் நீரே கோட்டையும் நீரே
உம்மை வாஞ்சிக்கிறேன்