
Thayaparaa ella Nallevin – தயாபரா எல்லா நல்லீவின்
Thayaparaa ella Nallevin – தயாபரா எல்லா நல்லீவின்
1.தயாபரா எல்லா
நல்லீவின் ஊற்றும் நீரே
உண்டானதை எல்லாம்
அளித்தோர் தேவரீரே
என் தேகம் ஆவிக்கும்
என் மனச்சாட்சிக்கும்
சீராயிருக்கிற
ஆரோக்கியம் கொடும்.
2.என் நிலைமையிலே
நீர் எனக்குக் கற்பித்து
கொடுத்த வேலையை
கருத்தாய் நான் முடித்து
நான் தக்க வேளையில்
ஒவ்வொன்றைச் செய்யவும்
என் செய்கை வாய்க்கவும்
சகாயமாயிரும்
3.எப்போதும் ஏற்றதை
நான் வசனிப்பேனாக
வீண் பேச்சென் நாவிலே
வராதிருப்பதாக
என் உத்தியோகத்தில்
நான் பேசவேண்டிய
சொல் விசனமில்லா
பலத்தைக் காண்பிக்க
4.என் சாவை கிறிஸ்துவின்
சாவால் ஜெயிப்பேனாக
பிரிந்த ஆவியை
உம்மண்டை சேர்ப்பீராக
சவத்துக்கோவெனில்
நல்லோர் கிடக்கிற
குழிகளருகே
இடம் அகப்பட
5.செத்தோரை நீர் அந்நாள்
எழுப்பும் போதன்பாக
என் மண்ணின் மேலேயும்
வாவென்ற சத்தமாக
கை நீட்டி எனக்கு
நீர் ஜீவனுடனே
வானோரின் ரூபத்தை
அளியும் கர்த்தரே.