Thooya Neariyil Vaazhavae – தூய நெறியில் வாழவே

Deal Score0
Deal Score0

பல்லவி

தூய நெறியில் வாழவே – துணைசெய் தேவே!

சரணங்கள்

1. தீய இருதயத்தால் – தெளிவில்லாத மனத்தால்
தரிசிக்கக்கூடுமோ? – அதால் துணைசெய் தேவே! – தூய

2. பல மிகு மாம்ச – பாவ இச்சாம்ச
சுவையில் சிக்காது நிமிடம் – துணைசெய் தேவே! – தூய

3. கெட்ட விஷயங்கள் – ஒட்டிக்கொள்ளாமல்
துட்டருடன் கலவாமல் – துணைசெய் தேவே! – தூய

4. அநித்திய உலகத்து – ஆசையோடெதிர்த்து
துணிந்து ஜெயம் பெற நித்தம் – துணைசெய் தேவே! – தூய

5. தேவ வசனத்தை – தினந்தினம் வாசித்தே விஸ்வாச
ஜெபத்தில் தரிக்க – துணைசெய் தேவே! – தூய

6. பார்வை பேச்சாலும் – கேள்வியினாலும்
சோரம் போகாமலிருக்க – துணைசெய் தேவே! – தூய

7. பாவிக ளேகும் பாதை செல்லாது
ஜீவிக்கத் தமியேனுக்கு – துணைசெய் தேவே! – தூய

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo