Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
உலகை மீட்கப் பிறந்தவர் – இன்று
உங்களைத் தேடுகிறார்
உங்களை மீட்க உள்ளன்போடு
உறவை நாடுகிறார்.
கோரஸ்: செல்லுங்கள் உடனே மானிடரே
சேருங்கள் உங்கள் மீட்பரிடம்
உள்ளத்தில் உள்ளதை எல்லாமும்
சொல்லுங்கள் தெய்வக் குழந்தையிடம்
சரணம் 1:
மாளிகை தேடிப் போகாதீர்
அங்கே அவர் இல்லை
கேளிக்கை விடுதியில் தேடாதீர்
காலம் வீணாகும்
ஆடிப் பாடும் அரங்குகளில்
அவரைத் தேடாதீர்
மாடுகள் அடையும் தொழுவத்திலே
தேடுங்கள் அவரைக் காண்பீர்கள்.
சரணம் 2:
மாலைகள், திரிகள் தேவையில்லை
அதை அவர் கேட்பதில்லை
பாலகன் ஏற்கும் காணிக்கைகள்
வாழும் வழிமுறைகள்
அன்புக் கட்டளைப் படி நடங்கள்
அவரின் அகம் மகிழும்
நீதியை, அறத்தை நேயத்தை
வாழுங்கள் அவரின் ஆசி வரும்