உலகத்தில் இருப்போரிலும் நம்மில் – Ulahathil Irupporilum
உலகத்தில் இருப்போரிலும் நம்மில் – Ulahathil Irupporilum
உலகத்தில் இருப்போரிலும் நம்மில்
இருக்கும் தேவன் பெரியவர்
துன்பங்கள் வந்தாலும் கஷ்டங்கள் வந்தாலும்
நம்மைக் கைவிடாமல் தாங்கிடுவார்
சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து
இஸ்ரவேல் ஜனத்தை அதில் நடத்திச் சென்றார்
பார்வோனையும் அவன் சேனைகளையும்
சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப் போட்டார்
தூதர்களின் மன்னாவை உணவாகக்கொடுத்து
வனாந்திரத்தில் ஜனத்தை நடத்திச் சென்றார்
கன்மலையைப் பிளந்து தண்ணீர்களை
வரவழைத்து ஜனத்தின் தாகம் தீர்த்தார்