ULLAM UDAINTHU LYRICS – உள்ளம் உடைந்து
ULLAM UDAINTHU LYRICS – உள்ளம் உடைந்து
உள்ளம் உடைந்து, விழிநீர் நிறைந்து,
மனசுமைகள் ஏந்தி வந்தேன்,
பரம் நோக்கி, கரம்கூப்பி நின்றேன் -(2)
கண்கள் காணா, தெய்வம் கண்டு,
சொல்லில் அடங்கா, சோகம் சொன்னேன் -(2)
பதிலை நான், வேண்டி நின்றேன்;
மூழங்காலில், காத்து நின்றேன்….(உள்ளம் )
லா ல லா, லா ல லா ல, லா ல லா
லா ல லா, லா ல லா, லா ல லா.
1) பசியாற தாராள முணவிருந்த போதும்,
சிறு குழந்தை மனதாறும் தாய்மார்பினில் தான்,
பலநூறு சொந்தங்கள் என் வாழ்வில் இருந்தும்,
தேவைகள் வரும் போது ஒருவருமே இல்லை,
பரிதவிக்கும், ஒரு தெய்வம்,
எனதருகில், என்றுமுண்டு,
அவரோ டுறவாடும்,
ஜெபவேளை, நித்தம் வேண்டும்;
உள்ளம் உடைந்து, விழிநீர் நிறைந்து (2)
2) பலம்வாய்ந்த எரிகோவின் கோட்டைகள் உடைத்து,
வளமான கானானில் கால்பதிக்க வைப்பார்,
பாவத்தின் கோட்டையை நான் ஜெயம்கண்டாலே,
அவரண்டை பரமேறும் பெரும்பாக்கியம் அடைவோம்
ஜெபமென்னும், ஜெய சேனை,
என்னை சூழ்ந்து, காத்து நிற்கும்,
பாவம் வெல்லும், அனுபவங்கள்,
தினந்தோறும், என்னில் தாரும்….(உள்ளம் )