Um Arul Vendum – உம் அருள் வேண்டும் song lyrics
பல்லவி
உம் அருள் வேண்டும் அறிவு எனக்கு வேண்டும்
உம்மை அறிகின்ற அறிவு வேண்டும் – 2
செம்மையானவர் சங்கத்தில் எனக்கோர் பங்கு வேண்டும்
ஆரோனின் ஆசாரியர் ஆசீர்வாதம் வேண்டும் – 2
உம் அருள் வேண்டும்
சரணம் I
பாரோர்கள் போற்றும் சுவிசேஷம் சொல்ல வேண்டும்
அருள் மாறி பொழியும் கிருபை எனக்கு வேண்டும் (2)
பரலோக வாசஸ்தலம் வாழும் வரம் வேண்டும்
பாவமற்ற வெண்ணாடை அணியும் வரம் வேண்டும் (2)
எக்காலத்திலும் துதி என் வாயில் இருக்க வேண்டும்
எந்நாளும் நான் உந்தன் மெய் வழியில் நடக்க வேண்டும்
உம் அருள் வேண்டும்
சரணம் II
எனக்கு குறித்ததை நிறைவேற்றுவார் அவர்
ஏராள நன்மைகள் நிறைந்த நம் தேவன் (2)
சகலத்தையும் செய்ய நல்லவர் இயேசு
செய்ய நினைத்ததை செய்து முடிப்பவர் (2)
நிச்சயமாகவே முடிவெனக்கு உண்டு
எந்தன் நம்பிக்கை வீண் போகாது
உம் அருள் வேண்டும்