
Um Namam Uyarnthathu – உம் நாமம் உயர்ந்தது
Um Namam Uyarnthathu – உம் நாமம் உயர்ந்தது
உம் நாமம் உயர்ந்தது
உம் மகத்துவம் உயர்ந்தது
ஆயிரம் நாமங்கள் கொண்டவர் நீரே
எங்கள் யெகோவா தேவனும் நீரே
கன்மலையானவர் நீர்
இரட்சண்யம் நிறைந்தவர் நீர்
இஸ்ரவேலின் தேவனும் நீரே
யாக்கோபிற்கு அடைக்கலம் நீரே
காருண்யமுள்ளவர் நீர்
கிருபை நிறைந்தவர் நீர்
பூரண அழகு உள்ளவர் நீரே
தேனிலும் மதுரம் நிறைந்தவர் நீரே
சாரோனின் ரோஜாவும் நீர்
லீலி புஷ்பமும் நீர்
சேனையின் கர்த்தர் பரிசுத்தர் நீரே
பூமி அனைத்திலும் நிறைந்தவர் நீரே
நீதி உள்ளவர் நீர்
நியாயம் தீர்ப்பவர் நீர்