உதவி செய்தருளே – Uthavi Seitharulae
உதவி செய்தருளே – Uthavi Seitharulae
பல்லவி
உதவி செய்தருளே!-ஒருவர்க்கொருவர் யாம்
உதவி செய்திடவே.
அனுபல்லவி
உதவி செய்தருள் மோட்ச
உசிதக் கோனே! நீ பூவில்
பதவி தந்திட வந்த போதினில்
பலருக்குதவின பான்மை போலவே. – உதவி
சரணங்கள்
1. ஒருவரொருவர்க்காய்-சிலுவை தூக்க
ஒத்தாசை தருவாய்!
தருண நேச சகாயம் சகலர்க்கும் புரிய
சகோதரன் படும் கஷ்டங் கவலையில்
சன்மனத்தொடு பங்கு பெற்றிட. – உதவி
2. உன்னன்பு தொடவே-எம்முள்ளங்கள்
ஒன்றாய்ப் பொருந்தவே,
எந்நாளும் பிறன்பால் யாம் ஏகியே கிட்டிட,
எந்தையே! உனையருகி நெருங்கிட,
உன்தயை செயல் தந்து மேற்பட. – உதவி
3. பிரியாமல் உனையே-பற்ற எமக்குப்
பெலன் தா! நீ துணையே!
நிறைவாய் உனிலிருந்த பரிவான அன்பின் சிந்தை
நினது சீடர்கள் பெறவே கிருபைசெய்!
நிதமு மதிலே மிக வுய்திடவே – உதவி
4. மாசற்ற பளிங்காய்-ஒளிருமுன்
மாணன்பு மிகவாய்,
ஆசற்ற குணமனி கோர்க்கும் பொற் சரடதே!
அழிவிலாததை எமக்குள் அணிந்திட,
ஆர்ந்துன் சிந்தையை நேர்ந்து செய்திட. – உதவி
Uthavi Seitharulae song lyrics in English
Uthavi Seitharulae Oruvarukkoruvar Yaam
Uthavi Seithidavae
Uthavi Seitharul Motcha
usitha Konae Nee Poovil
Pathavi Thanthida Vantha Pothinil
Palarukkuthavina Paanmai Polavae
1.Oruvarukkaai Siluvai Thooga
Oththasai Tharuvaai
Tharuna Neasa Sahaayam Sagalarkkum Puriya
Sakotharan Padum Kastam Kavalaiyil
Sanmanathodu Pangu Pettrida
2.Unnaanbu Thodavae Emmullangal
Ontraai porunthavae
Ennaalum Piranpaal Yaam Yeahiyae Kittida
Enthaiyae Unnaiyarugi Nerungida
Unthayai seyal Thanthu Mearbada
3.Piriyaamal Unnaiyae Pattra Emakku
Belan Thaa Nee Thunaiyae
Niraivaai Uniliruntha Parivaana Anbin sinthai
Ninathu Seedargal Peravae Kirubai Sei
Nithamu Mathilae Miga Uyithidavae
4.Maasattra Palingaai Olirumun
Maananbu Migavaai
Aasattra Gunamani Korkkum Por Saradathe
Alivillathathai Emakkul Aninthida
Aarnthun Sinthaiyai Nearnthu Seithida