Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக

Deal Score0
Deal Score0

Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக

பல்லவி:

உயிராக, நலமாக இறைவா நீ வா -இந்த
உலகோரின் நிலை கண்டு உடனே நீ வா

அனுபல்லவி:

நோயோடும் சாவோடும் போராடிடும் -உன்

சேயோருக்காய் மீண்டும் பிறந்திங்கு வா

சரணம் 1:

எண்ணற்ற எளியோர்க்கு வேலை இல்லை -அவர்
எதிர்காலம் புரியாத புதிராகுதே

மண்மீது நீ வந்த பொன்னாளையே
மன
மகிழ்வோடு கொண்டாடும் நிலையில்லையே

கோரஸ்:
ஆலயம் போகமுடியவில்லை- அங்கு
அழுதே தொழுதிட வழியுமில்லை
பள்ளிகள் இல்லை பயணம் இல்லை –
இதுவரை இது போல் பார்த்ததில்லை

சரணம் 2:
மதம் சாதி எனப் பேசி தீ மூட்டியே – நம்

மனம் தேடும் மனிதத்தை ஏன் கொல்லுவார்?
உழுதுண்டு உழைக்கின்ற விவசாயிகள் -இங்கு
சாவொன்றே தீர்வென்று ஏன் எண்ணுவார்?

கோரஸ்:
நீதியின் தேவதை குரல் இழந்து- இங்கு
நிற்கின்றாரே கண் சிவந்து

பணியாளருக்கு கைவிலங்கு
எங்கள்
மனதிற்கு இல்லை ஒரு மருந்து

சரணம் 3:
திண்டாடும் உலகத்தை மீட்கத் தானே- இந்த
மண் மீது ஏழை போல் நீ தோன்றினாய்
அன்றாடம் கவலைகள் கண்ணீருமாய் – இங்கு
அலைமோதும் உன் மக்கள் நிலை பார்த்து வா

கோரஸ்:

நீ சொல்லி நீங்காத் துயரும் இல்லை – என்றும்
நீ சொல்லி அடங்காப் புயலும் இல்லை
தூக்கம் கலைந்து நீ எழுந்து – எம்

துயரம் போக்க வா இறைவா

கிறிஸ்து பிறப்பு தியானப் பாடல்

    The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
    god medias
        christian Medias - Best Tamil Christians songs Lyrics
        Logo