Uyirinum Uyiraai – உயிரினும் உயிராய்

Deal Score0
Deal Score0

Uyirinum Uyiraai – உயிரினும் உயிராய்

உயிரினும் உயிராய் நேசித்து
உதிரும் ஜீவன் எனக்கு தந்து – 2

விலை கொடுத்து என்னை வாங்கினாய்
என் ஏசுவே
உமக்காக வாழ்வேன் ஏசுவே
என் ஏசுவே
உமக்காக வாழ்வேன் ஏசுவே – 2 – உயிரினும்

சிலகாலம் உம்மை நினையாமல் போனேன்
அதனாலே வருத்தங்கள் நான் அடைந்தேன் – 2
உமது ஆவி எனக்குள் அனல் கொள்வதாலே – 2
உமது சத்தம் கேட்டு உமது சித்தம் செய்யவே – 2 – உயிரினும்

இனிமேல் நான் அல்ல ஏசுவே வாழ்கிறார்
அவர் வாசம் செய்யும் தேவாலயம் நான் – 2
தேவ மகிமை என்னை மூடும் – 2
காலை தோறும் புதிய கிருபையை காண்பேன் – 2 – உயிரினும்

தாயினும் மேலாய் தந்தையினும் மேலாய்
அன்பு பாசம் காட்டி அணைப்பவரே – 2
திராட்சை கொடிபோல் உமது நேசம் படரும் – 2
தினமும் இனிய கனிகள் கொடுத்திடுவேன் – 2 – உயிரினும்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo