
Uyirulla Deivam – உயிருள்ள தெய்வம்
Uyirulla Deivam – உயிருள்ள தெய்வம்
உயிருள்ள தெய்வம்!
உயிரோடெழுந்த சமயம்!
வானதூதர் பணிந்து போற்றும்
விண்ணின் தேவ மைந்தன்! – புவிக்கு
தானாய் வந்து பிறந்து
தன்னின் ஜீவன் தந்தார்!
ராஜாதி ராஜன் இயேசு உலகில்
தச்சனின் மகனாய்ப் பிறந்தார்!
தேவாதி தேவன் இயேசு உலகில்
தரித்திரக் கோலம் கண்டார்!
மன்னாதி மன்னன் இயேசு உலகில்
மானிக் கஷ்டம் கண்டார்!
கர்த்தாதி கர்த்தர் இயேசு உலகை
காத்திடத் தன்னுயிர் தந்தார்!
அன்பு அறிந்த இனிய இயேசு
அனைவருக்காய் மனமுருகினார்!
பண்பு அறிந்த பரமன் இயேசு
பாவம் கண்டு கோபமுற்றார்!
நட்பு அறிந்த நண்பர் இயேசு
நண்பருக்காய் கண்ணீர் விட்டார்!
மாண்பு அறிந்த மன்னர் இயேசு
மனிதருக்காய் உயிரை விட்டார்!
மனிதர் படும் பல கவலை
மன வேதனை அனுபவிக்க- நமை
புனிதர் ஆக்க நமது சாபம் பாவம்
நோய்கள் தீர்க்க
இனிதாய் இருந்த விண் வாழ்வதனை
இமைப் பொழுதில் உதறி விட்டு
தனியாய் வந்து புவி வாழ்வு
வாழ்ந்து தன்னுயிரைத் தானே ஈந்தார்!
சாபம் தீர்க்க சரித்திரம் பிளக்க
சாதாரண மனிதனாய் வந்தார்! – நம்
பாவம் போக்க பவித்ரம் கொடுக்க
பாடுகள் வதைகள் பட்டார்! – நம்
ரோகம் நீக்க சவுக்கியம் பெருக்க
இரட்சகர் உயிரை விட்டார்! – மோட்ச
லோகம் சேர்க்க நித்தியம் சேர்க்க
உயிரோடு எழுந்தார் இயேசு!
சங்கீதா பிரபு தாமஸ்
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்