Va Kalvaari Mettandai – வா கல்வாரி மேட்டண்டை
1. வா, கல்வாரி மேட்டண்டை
மீட்பர் அங்கே மாண்டார்
ஆழ்ந் தகன்று நிறைந்த
இரத்த ஊற்றுண்டு பார்!
முற்றாய் பாவத்தை விட்டு
நம்மை நீக்கி வைப்பார்!
அவர் பாதம் தங்கிடு;
இரட்சித் தென்றும் காப்பார்!
பல்லவி
முற்றுமாய் இரட்சிக்கின்றார் (2)
இப்போதே நம்பு
பார் அவர் அன்பு
முற்றுமாய் இரட்சிக்கின்றார்!
2. தேவனின் மா இரட்சிப்பு
இப்போதே கிடைக்கும்!
இரத்தத்தாலான மீட்பு
உனக்கும் பலிக்கும்!
விஸ்வாசத்தின் கை நீட்டு
முற்றும் சுத்தம் ஆவாய்!
நம்பிச் சொந்தம் பாராட்டு
அவரால் நிறைவாய் – முற்று
3. என்னை நான் பலியிட்டு
செய்வேன் மீட்பர் சித்தம்;
அவர் என்னில் அன்புற்று
ஈவார் ஆத்ம சுத்தம்!
நம்பி நான் இப்போ பெற்றேன்
இந்த ஆசீர்வாதம்!
தேவாவி என்னில் பற்றி
ஜூவாலிக்கு தென்னுள்ளம் – முற்று