
VAANAM THIRANTHU UNGA AAVIYAI – வானம் திறந்து உங்க ஆவியை
VAANAM THIRANTHU UNGA AAVIYAI – வானம் திறந்து உங்க ஆவியை
1. வானம் திறந்து உங்க ஆவியை
வறண்ட நிலங்களில் இன்று பொழியுமே -(2)
நிரம்பி நிரம்பி வழியணுமே
தேசமெங்கும் பாயணுமே -(2)
என்னை நிரப்பும் என்னை நிரப்பும்
உங்க வல்லமையால் நிரப்பணுமே (2)
2. கடைசி நாட்களில் இயேசுவின் நாமத்தில்
ஜெயிக்கும் வீரனாய் தேசத்தை கலக்குவோம் -(2)
ஓடி ஓடி உழைக்கணுமே
உம் அன்பை எடுத்து சொல்லணுமே -(2)
என்னை மாற்றும் என்னை மாற்றும்
உம்மை போல் என்னை மாற்றணுமே -(2)
3. பரிசுத்தவான்கள் பாடும் தேசத்தில்
மகிமையின் சாட்சியாய் உம் முன் நிற்க்கணுமே -(2)
எரியும் விளக்காய் ஜொலிக்கணுமே
உங்க விருப்பம் செய்யணுமே -(2)
என்னை நடத்தும் என்னை நடத்தும்
உங்க பிள்ளையாய் நடத்துணுமே -(2)
யோவேல் 2: 28 –
அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.