VAANAVAR ISAYIL – வானவர் இசையில் வாழ்த்தொலி கிறிஸ்துமஸ் பாடல்
வானவர் இசையில் வாழ்த்தொலி கேட்டு
மன்னவனே துயிலாய் அமைதியான இரவு
நம் அமலன் பிறந்த இரவு இறைவன் கொண்ட துறவு
நம் இதயம் வென்ற உறவு
ஆராரிராரோ ஆராரிராரோ
அன்பென்னும் மலர் விரித்து அருளெனும் மணம் விடுத்த
இறைமகன் பிறந்திருக்க இமையெல்லாம் விழித்திருக்கும்
ஆராரிராரோ ஆராரிராரோ
தன்னலம் மறமறந்து மண்ணவர் நிலை உணர்ந்து
விண்ணவன் விழி திறக்க மண்ணகம் மலர்ந்திருக்கும்