வாரீரோ வினை திரீரோ – Vaareroo Vinai Therero

Deal Score+2
Deal Score+2

வாரீரோ வினை திரீரோ – Vaareroo Vinai Therero

பல்லவி

வாரீரோ? வினை தீரீரோ? எனைக்
காரீரோ? ஜீவன் தாரீரோ, யேசு

அனுபல்லவி

வாரேனென்றீர், வரந் தாரேனென்றீர், சுவாமீ;
பாரினிலே யெனக்கு யாருமில்லை, துணைக்கு. – வாரீரோ

சரணங்கள்

1. தேனே, மரிமகனே, தேடி மறுகுங் கோனே,
சேனைகளின் சீமோனே, சிந்தை கலங்கி நானே
கானகமே மேவும் மானது போலானேன்;
வானகம் போன தேவா, ஏனோ வரத் தாமதம்? – வாரீரோ

2. அட்ட திக்கெங்கு மென்னைத் துட்டப் பாசாசுக் கூட்டம்
இட்டப் படுத்தவல்லோ கிட்ட வளையது, பார்
அடுத்தாலோ, அம்பைத் தொடுத்தாலோ என்ன!
அடுபடையாக நின்று தடு படை செய்வீர், யேசு, – வாரீரோ

3.கோழி தன் குஞ்சுதன்னைக் கூவியழைக்கு நேராய்
‘கூளி எனை ‘யிறாஞ்சி ஆழியிலாக்கிடாமல்
கூப்பிட்டீரே, எனக்கு மாப்பிட்டீரே! ஒதுங்க
“தாப்பிட்டீரே, வர வாக்கிட்டீரே! பின்னை

4. காணாத ஆட்டைத் தேடிக் காடெங்கும் சென்ற கோன் நீர்
கண்டு பிடித்த ஆட்டைக் கொண்டு தொழுவஞ் சேர்க்கக்
கருத்துடனே மிக உரித்துடனே இரு
கரத்திலேந்தி வலப் புறத்தில் வைப்பீர் திண்ணம். – வாரீரோ

5. வீடு எனக்குச் செய்ய மேலோகம் போன தேவா,
கூட இருத்தி வைக்கக் கூப்பிட வாறேனென்றீர்;
கொண்டு வருவீர் முடி, நின்று வருவீர் நொடி;
கண்டு மகிழ்வேன், கூடி நின்று புகழ்வேன் கெடி. – வாரீரோ

Vaareroo Vinai Therero song lyrics in English

Vaareroo Vinai Therero Enai
Kaareero Jeevan Thareero Yesu

Varenteer Varam Tharaen Enteer Swami
Paarililae Enakku Yaarumila Thunaikku

1.Theanae Marimaganae Theadi Marugun Konae
Seanaikalin Seemonae Sinthai Kalangi Naanae
Kaanagamae Meavum Maanathu Polanean
Vaanagam pona Deva Yeano Vara Thamatham

2.Atta Thikkengu Mennai Thutta Pasasaukottam
Itta Paduththavallo Kitta Valaiyuthu Paar
Aduththalo Ambai Thoduthalo Enna
Adupadaiyaga Nintru Thadu Padai Seiveer Yesu

3.kozhi Than Kunju Thanni Kooviyalaikku Nearaai
Kooli Enai Iranji Aaaliyilakkidaamal
Kooppitteerae Enakku Maappitteerae Othunga
Thaappitteerae Vara Vakkitteerae Pinnae

4.Kaanatha Aattai Theadi Kaadengum sentra Koan Neer
Kandu Piditha Aattai Kondu Tholuvam Searkka
Karuthudanae Miga Urithudanae Iru
Karathileanthi Valapurathil Vaipeer Thinnam

5.Veedu Enakku Seiya Mealogam Pona Deva
Kooda Iruththi Vaikka Kooppida Vaaranteer
Kondu Varuveer Mudi Nintru Varuveer Nodi
Kandu Magivean Koodi Nintru Pugalvean Keadi

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo