Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
வாரும் தெய்வ வள்ளலே
வரங்கள் வழங்க வாருமே
தாரும் அமைதி, நம்பிக்கையை
தாரும் அன்பை, மகிழ்ச்சியை
நன்றே நிகழும் என்றே
நம்பி வாழும் மனம் ஒன்று தா
அன்றாடம் இருள் வந்து நின்றாலுமே- அது
சென்றோடும் பகலவன் வந்தால் போதும்
வருவாய், ஒளியே
கதிரே, சுடரே, எம் நெஞ்சில் பிறப்பாயே
அமைதி தானே நியதி
என்று கூறும் நிலை இங்கு தா
போர் எல்லாம் தீரட்டும் பாரெங்குமே – பகைத்
தீ எல்லாம் ஓயட்டும் ஊரெங்குமே
இறைவா, வருவாய்
இதயம் நிதமும் ஏங்கும் அமைதியைத் தா
அன்பே வாழ்க்கை என்றால்
இன்பம் தானே பயணத்திலே
அன்பாலே அகிலத்தை நாம் ஆளுவோம் -மனம்
மகிழ்ந்தாட உறவாடி நாம் வாழுவோம்
அன்பே, வருவாய்
அழியா, குறையாப் பேரன்பைத் தருவாயே
கிறிஸ்து பிறப்பு பாடல்