
Vaarum Suththa Aaviyae – வாரும் சுத்த ஆவியே
1. வாரும் சுத்த ஆவியே!
அடியார்கள் உள்ளத்தில்
மூன்றாம் ஆள் திரியேகத்தில்
மகிமையைக் காட்டிடும்
பல்லவி
வாரும் வல்ல ஆவியே,
அடியார் உள்ளத்திலே
வாஞ்சையை நீர் தீர்த்திட
வாரும் சுவாமி வாரும்!
வாரும் சுவாமி! வாரும் என் சுவாமி! வாரும்!
2. ஆத்மா தேகம் யாவையும்
இந்த வேளை அடியேன்
பூசையாய்ப் படைக்கிறேன்;
அன்பாய் நீர் சுத்தி செய்யும் – வாரும்
3. நேசமானம் வஸ்துக்கள்
உற்றார் பெற்றார் யாவரும்
மற்றும் ஆசா பாசங்கள்;
முற்றும் இதோ நீர் வாரும் – வாரும்
4. நம்பிக்கையோடிதோ நான்
பிராண நாதர் பலத்தால்
ஆசீர்வாதம் பெறுவேன்
விசுவாச ஜெபத்தால் – வாரும்