Vaarumaiya Pothagarae – வாருமையா போதகரே

Deal Score0
Deal Score0

1. வாருமையா போதகரே!
வந்தெம்மிடம் தங்கியிரும்;
சேருமையா பந்தியிலே
சிறியவராம் எங்களிடம்

2. ஒளி மங்கி இருளாச்சே,
உத்தமனே வாருமையா!
களித்திரவு காத்திருப்போம்
காதலரே வாருமையா!

3. ஆதரையில் எம் ஆதரவே
அன்பருக்கு சதா உறவே;
பேதையர்க்கும் பேரறிவே
பாதை மெய் ஜீவ சற்குருவே

4. நாமிருப்போம் நடுவில் என்றீர்
நாயகா உம் நாமம் நமஸ்கரிக்க;
தாமதமேன் தயை புரிய
தற்பரனே நலம் புரிவாய்

5. அமர்ந்திடுவீர் ஆசனத்தில்
எழுந்திடுவீர் எம் நடுவில்;
ஆசீர்வதித் தீந்திடுவீர்
அன்புடனே அருள்மாரியை

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo