Vaazthiduven Vaazthiduven – வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன்

Deal Score0
Deal Score0

1. வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் வாழ்த்திடுவேன் நான் – என்
இரட்சகரை நன்றியோடே வாழ்த்திடுவேன் நான்

2. மாட்டுத்தொழுவில் பிறந்த மகிமை சுதனே!
ஈனவேஷம் எடுத்த உம்மை வாழ்த்திடுவேன் நான் – வா

3. பாதகர்க்காய் நீதிவழி ஓதித் தந்தவரே!
பாரிலும்மை நினைத்து என்றும் வாழ்த்திடுவேன் நான் – வா

4. குருசெடுத்து கொல்கொதாவிலேறிச் சென்றவரே! திருப்
பாதம் ரெண்டும் முத்தஞ்செய்து வாழ்த்திடுவேன் நான் – வா

5. குருசிலேறி மரித்துயிர்த்து சொர்க்கம் போனவரே!
நித்தமும் நீர் ஜீவிப்பதால் வாழ்த்திடுவேன் நான் – வா

6. தூதரோடு மேகமீது வாறேனென்றாரே
நானும்மைக் காண்பதற்காய்க் காத்திருப்பேனே! – வா

7. உன் வரவில் முன்னணியில் நின்றிடவே நான்
என்னை ப்ராப்தியாக்கிடுமேன் உம் கிருபையால் – வா

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo