
Vedhamae Enna Solluvean – வேதமே என்ன சொல்லுவேன்
Vedhamae Enna Solluvean – வேதமே என்ன சொல்லுவேன்
வேதமே என்ன சொல்லுவேன்?
பல்லவி
வேதமே, என்ன சொல்லுவேன்?-நின் மாட்சியை.
அனுபல்லவி
சேத மிலாது நன்னாதர் தம் அருள் திருப்
பாதமுறும் நெறி யோது மொரே சத்ய. – வேத
சரணங்கள்
1. கண்முன் நீ எழுந்தானால் கரையிலா ஞானம்;
காந்தி நற்பனி மழை கசிந்திடும் வானம்;
புண் மனமுடை யோர்க்குப் புகழருந் தானம்;
புசித்திடக் கசித்திட ருசித்திடும் பானம். – வேத
2. சிறியவர் பெரியவர் செல்வர்கள் வலியார்
தீரர்கள் வீரர்கள் சீரியர் எளியார்
அறிஞர்கள் அல்லவர் ஆடவர் மெலியார்
அனைவரும் அருந்திட அருந்திடச் சலியார். – வேத
3. கனபல மருளுவாய், தினந்தினங் காலை
களைப்பினைப் போக்குவாய், களைப்புறு மாலை
தினமென திதயமே திருத்தலுன் வேலை,
செப்பருங் கனிதருங் கற்பகச் சோலை. – வேத
4. அகமுறு மானைகள் விழுந்து தள்ளாடும்;
அருள்நதி ஆடுகள் நடந்துனி லோடும்;
தகவுனின் கரைகளில் குருவிகள் கூடும்;
தருக்கள் செழித்திருக்கும் தாசர்கள் நாடும். – வேத
5. பொன் அபரஞ்சியிலும் உன் விலை பெரிதே!
பூவுலகினிலுனக் குவமைக ளரிதே;
நின்னை யசட்டை செய்வோர் நிலைமிக வறிதே!
நின்படிப் பறியாதோர் கல்விமா சிறிதே! – வேத
6. இருபுறங் கருக்குவாள் தனிலும் நீ கூரே!
இகபரம் ரண்டிற்கும் உன்வழி நேரே!
கிருபை எத்தனமுனக் கேற்ற நற்பேரே!
கிறிஸ்துவின் அருள்தனை எனக்கு நீ வாரே! – வேத
Vedhamae Enna Solluvean song lyrics in English
Vedhamae Enna Solluvean
Nin Maatchiyai
Seathamilathu Nannaathar Tham Arul Thiru
Paathamurum Neari Yothu Morae Sathya
1.Siriyavar Periyavar Selvargal Valiyaar
Theerargal veerargal Seeriyar Eliyaar
Aringargal Allavar Aadavar Mealiyaar
Anaivarum Arunthida Saliyaar
2.Kanapala Marulvaai Thinam Thinam Kaalai
Kalipinai Pookkuvaar Kalaipura Maalai
Thinameana Thithayamae Thiruthulan Vealai
Sepparum Kanitharum Karpaga Solai