Vellai Nilavu Mithakkum Vaanilae – வெள்ளை நிலவு மிதக்கும் வானிலே
Vellai Nilavu Mithakkum Vaanilae – வெள்ளை நிலவு மிதக்கும் வானிலே
வெள்ளை நிலவு மிதக்கும் வானிலே
பனி துளிகள் தூவும் பொழுதிலே
மாட்டு தொழுதின் நடுவிலே
சூசை மரி மடியிலே
தவழும் எம் செல்ல பாலகா
உம்மை போற்றி புகழும்
எந்தன் உள்ளமே
அன்பே அமுதே கண்ணின் மணியே
தவழ்ந்து வா நீ தவழ்ந்து வா
இந்த பூமி ஆள வா 2
1) மாளிகை இருந்தாலும் கடவுளின் உளமேற்று
குடிலினில் பிறந்த எங்கள் அன்பு செல்வமே
ஆராரோ 2 ஆரிராரிரோ
வானதூதர் செய்தி சொல்ல விண்மீன்கள் வழிகாட்ட
ஞானிகள் உம் முகத்தை காண வந்தனரே
ஆராரோ 2 ஆரிராரிரோ
அன்னை மரி மடியினிலே
பேரொளி தவழ்கிறதே
உலகை ஆள வந்த இறைமகன் இவர்தானே
என்பாவம் போக்க வந்த தூயவரே
கண்ணுறங்கு என் இதய குடிலினிலே – அன்பே
2) ஆண்டவர்க்கு புதியதொரு பாடல் பாடிடுங்கள்
அவரை போற்றுங்கள் தினமும் வாழ்த்துக்கள்
உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி என்றுமே
வானங்கள் மகிழட்டும் பூவுலகு ஒளிரட்டும்
கடலும் உயிர் யாவும் போற்றி புகழட்டும்
உலகினிலே மானிடர்க்கு அமைதி என்றுமே
ஆநிரை மந்த்தையிலே ஆனந்தம் பெறுகிடுதே
வானவர் கீதங்களும் வாழ்த்துக்கள் பாடுதே
வான்தேவன் இயேசு பாலன் பிறந்த நாளிலே
ஆராரோ தாலாட்டு எந்தன் நெஞ்சிலே -அன்பே
Vellai Nilavu Mithakkum Vaanilae lyrics , Vellai Nilavu Christmas song lyrics