Vendam Endru Verutha – வேண்டாம் என்று வெறுத்த

Deal Score+1
Deal Score+1

Vendam Endru Verutha – வேண்டாம் என்று வெறுத்த

வேண்டாம் என்று வெறுத்த என்னை
உயர்த்தின தெய்வமே
அணைந்த திரி போன்ற என்னை
அக்கினி அனலாக மாற்றினீர்-2

வெறும் கோல் வைத்து அற்புதம் செய்தீர்
என்னையும் பயன்படுத்துவீர்-2
அதை உணர்ந்து நான் பாடுவேன்
உம் மகிமை நான் காண்பேன்-2

எனக்காய் உதவிடும் தேவனே
என் பாவம் கழுவிட வந்தவரே-2
பரலோகின் தேவனே இராஜாதி இராஜனே
என் பாவம் துடைக்க வந்தார்-2

பெரிய காரியங்கள் செய்பவரே
எனக்காய் யாவையும் செய்தவரே-2
கழுகைப்போல் பறந்து உன்னதத்தில் பறந்து
மேலான அபிஷேகம் வாஞ்சிப்பேன்-2

என்னை சுகமாக்கும் தெய்வமே
என்னை பெலனாக்கும் வல்லமையே-2
ஆடையை தொட்ட நொடியினிலே
அந்த ஸ்திரீயும் சுகம் பெற்றாள்-2

வேண்டாம் என்று வெறுத்த என்னை
உயர்த்தின தெய்வமே
அணைந்த திரி போன்ற என்னை
அக்கினி அனலாக மாற்றினீர்-2

வெறும் கோல் வைத்து அற்புதம் செய்தீர்
என்னையும் பயன்படுத்துவீர்-2
அதை உணர்ந்து நான் பாடுவேன்
உம் மகிமை நான் காண்பேன்-2

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo