வெற்றி கீதம் பாடும் இயேசுவின் – Vettri Keetham Paadum Yesuvin lyrics
வெற்றி கீதம் பாடும் இயேசுவின் – Vettri Keetham Paadum Yesuvin lyrics
வெற்றி கீதம் பாடும் இயேசுவின் பிள்ளைகளே
ஜெயக்கொடி கையிலேந்தும் இயேசுவின் பிள்ளைகளே
பாடுங்கள் அல்லேலூயா இயேசுவின் பிள்ளைகளே (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)
சரணங்கள்
1. பாவத்தின் மீது வெற்றி
சாபத்தின் மீது வெற்றி
வியாதியின் பேரில் வெற்றி
மரணத்தின் மேலும் வெற்றி – பாடுங்கள்
2. தேவனால் பிறந்த எவனும்
பாவம் செய்வதில்லை
தன்னைக் காத்துக் கொள்வான்
சாத்தான் தொடுவதில்லை – பாடுங்கள்
3. சோதனை தொடர்ந்து வந்தும்
வேதனை தொடர்வதில்லை
தாங்கும் பெலனை ஈவார்
தப்பிடும் வழியைத் தருவார் – பாடுங்கள்
4. சாத்தான் சேனையை விட்டு
இயேசுவின் சேனை சேர்ந்தோம்
பாவ வாழ்வினை விட்டு
தேவப் பிள்ளைகளானோம் – பாடுங்கள்