
விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே – Viswasathodu Saatchi Pakarnthatae
விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே – Viswasathodu Saatchi Pakarnthatae
1. விஸ்வாசத்தோடு சாட்சி பகர்ந்தே
தம் வேலை முடித்தோர் நிமித்தமே,
கர்த்தாவே, உம்மைத் துதி செய்வோம்
அல்லேலூயா! அல்லேலூயா!
2. நீர் அவர் கோட்டை, வல் கன் மலையாம் (நீர் அவர் வல்ல கோட்டைஆயினீர் )
நீர் யுத்தத்தில் சேனைத் தலைவராம் (வெம்போரில் வெற்றி தந்து வாழ்வித்தீர் )
நீர் காரிருளில் பரஞ்சோதியாம், (காரிருளில் மா ஜோதி வீசினீர் ,)
அல்லேலூயா! அல்லேலூயா!
3. முன்நாளில் பக்தர் நற் போராடியே
வென்றார்போல் நாங்கள் வீரராகவே,
பொற்கிரீடம் பெற்றுக் கொள்வோமாகவே,
அல்லேலூயா! அல்லேலூயா!
4. இங்கே போராடி நாங்கள் களைத்தும்
உம் பக்தர் மேன்மையில் விளங்கினும்
யாவரும் உம்மில் ஓர் சபை என்றும்
அல்லேலூயா! அல்லேலூயா!
5. போர் நீண்டு மா கடூரமாகவே, (கடூர யுத்த ஆரவாரத்தில் ,)
கெம்பீர கீதம் விண்ணில் கேட்குமே, (கெம்பீர கீதம் விண்ணில் கேட்கையில் ,)
நாம் அதைக் கேட்டு, தைரியம் கொள்வோமே (அஞ்சாமல் வீரம் கொள்ளுவோம் நெஞ்சத்தில் )
அல்லேலூயா! அல்லேலூயா!
6. செவ்வானம் மேற்கில் தோன்றி ஒளிரும்
மெய் வீரருக்கு ஓய்வு வாய்த்திடும்,
சீர் பரதீசில் பாக்கியம் அமையும்
அல்லேலூயா! அல்லேலூயா!
7. மேலான பகல் பின் விடியும் பார்! (அப்பாலே நித்ய பகல் விடியும் )
வென்றோர் கெம்பீரமாய் எழும்புவார் (வென்றோர்கள் மாட்சியாய் எழும்பவும் )
மாண்புறும் ராஜா முன்னே செல்லுவார், (கிறிஸ்துவின் ராஜரீகம் தொடங்கும் )
அல்லேலூயா! அல்லேலூயா!
8. அநந்த கூட்டம் நாற்றிசை நின்றும்
திரியேகருக்கு ஸ்தோத்ரம் பாடியும்
விண் மாட்சி வாசலுள் பிரவேசிக்கும்
அல்லேலூயா! அல்லேலூயா!
Viswasathodu Saatchi Pakarnthatae song lyrics in English
1.Viswasathodu Saatchi Pakarnthatae
Tham Vealai Mudiththor Nimiththamae
Karththaavae Ummai Thuthi Seivom
Alleluya Alleluya
2.Neer Avar Koattai Val Kan Malaiyaam
Neer Yuththaththil Seanai Thalaivaraam
Neer Kaarirulil Paranjjothiyaam
Alleluya Alleluya
3.Munnaalil Bakthar Narporaadiyae
VentraarPoal Naangal Veeraraagave
Porkreedam Pettru Kolluvomaagavae
Alleluya Alleluya
4.Engae Poraadi Naangal Kalaiththum
Um Bakthar Meanmaiyil Vilanginum
Yaavarum Ummil Oor Sabai Entrum
Alleluya Alleluya
5.Poar Neendu Maa Kaduramaagavae
Kembeera Geetham Vinnil Keatkumae
Naam Athai Keattu Thairiyam Kolluvomae
Alleluya Alleluya
6.Sevvaanam Mearkkil Thontri Olirum
Mei Veerarukku Ooivu Vaaiththidum
Seer Paratheesil Baakkiyam Amaiyum
Alleluya Alleluya
7.Mealaana Pagal Pin Vidiyum Paar
Ventroor Kembeeramaai Elumbuvaar
Maanpurum Raaja Munnae Selluvaar
Alleluya Alleluya
8.Anantha Koottam Naattrisai Nintrum
Thiriyeagarukku Sthothram Paadiyum
Vin Maatchi Vaasalul Piraveasikkum
Alleluya Alleluya
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்