யாக்கோபென்னும் சிறு பூச்சியே-Yakobennum Siru poochiye

Deal Score0
Deal Score0

யாக்கோபென்னும் சிறு பூச்சியே பயப்படாதே
இஸ்ரவேலின் சிறுகூட்டமே கலங்காதே-2
உன்னை பேர் சொல்லி அழைத்தேன்
உள்ளங்கையில் வரைந்தேன்
நீ என்னால் மறக்கப்படுவதில்லை-2

யாக்கோபே நீ வேரூன்றுவாய்
யாக்கோபே நீ பூத்துக்குலுங்குவாய்
யாக்கோபே நீ காய்த்துக்கனி தருவாய்
நீ பூமியெல்லாம் நிரப்பிடுவாய்-2

1.நீ வலப்புறம் சாயாமல் இடப்புறம் சாயாமல்
கால்களை ஸ்திரப்படுத்தி
உன் மேல் என் கண்ணை வைத்து
ஆலோசனை தருவேன்-2-யாக்கோபே

2.பக்கத்தில் ஆயிரம் விழுந்தாலும்
உன்னை சேதப்படுத்தாது
சத்துரு அடைந்திடும் பலனை
கண்கள் காணாமல் போகாது-2-யாக்கோபே

3.விரோதமாகும் ஆயுதங்கள்
வாய்க்காதே போகும்
எதிராய் செய்த மந்திரம் எல்லாம்
செயலற்றே போகும்-2-யாக்கோபே

 

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo