யாரவர் பாரேன் – Yaravar Parean
யாரவர் பாரேன் – Yaravar Parean
பல்லவி
யாரவர் பாரேன்?
யாரவர் கேளேன்!
பாரேன்! பாவி உன்
ஆத்துமக் கதவைத்
தட்டும் நாயகனை
சரணங்கள்
1. இந்த நல் உணர்வு
வந்ததோ இதன்முன்?
தந்தால் இப்போ உன்
ஆத்துமத்தைச் சுத்தம்
செய்வேன் என்கிறார் கேள் – யாரவர்
2. பாவியே உந்தன்
பாவங்கள் போக்க
விண்ணை விட்டு
நீதி நிறைவேற்றிட
மண்ணில் ஆனவரை! – யாரவர்
3. ஐந்து காயத்தினால்
அருள் நதியாக
பாய்ந்து வடியும்
மா அன்பின் இரத்தத்தால்
தோய்ந்து நிற்கிறார் பார்! – யாரவர்
4. நேசர் கண்ணீரை
பாசமாய் சொரிந்து
பேசுகிறார் இன்னும்
சாந்தமாய் நின்று, உன்
மாசு தீர்க்க வென்றே! – யாரவர்