
Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான்
Yean Intha Paaduthan – ஏன் இந்தப் பாடுதான்
ஏன் இந்தப் பாடுதான்! – சுவாமி
என்ன தருவேன் இதற்கீடுநான்?
ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு சுவாமியே
1. கெத்செமனே யிடம் ஏகவும் – அதின்
கெழு மலர்க் காவிடை போகவும்
அச்சயனே, மனம் நோகவும் – சொல்
அளவில்லாத் துயரமாகவும்
2. முழந்தாள் படியிட்டுத் தாழவும் – மும்
முறை முகம் தரைபட வீழவும்
மழுங்கத் துயர் உமைச் சூழவும், – கொடு
மரண வாதையினில் மூழ்கவும்
3. அப்பா, பிதாவே என்றழைக்கவும், – துயர்
அகலச் செய்யும் என்றுரைக்கவும்
செப்பும் உன் சித்தம் என்று சாற்றவும், – ஒரு
தேவதூதன் வந்து தேற்றவும்
4. ஆத்துமத் துயர் மிக நீடவும், குழம்
பாக உதிர வேர்வை ஓடவும்
சாத்திர மொழிகள் ஒத்தாடவும், – உந்தன்
தாசரும் பதந்தனை நாடவும்
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்