
Yeasvukkai Yaavattaium – இயேசுவுக்காய் யாவற்றையும்
1. இயேசுவுக்காய் யாவற்றையும்
ஒப்புவிக்கிறேன் இப்போ,
நேசித்தவர் சமூகத்தில்
ஜீவிப்பேன் நம்பி என்றும்
பல்லவி
ஒப்புவிக்கிறேன் (2)
இரட்சகரே என் யாவையும்
ஒப்புவிக்கிறேன்
2. இயேசுவுக்காய் யாவற்றையும்
ஒப்புவிக்கிறேன் இப்போ
லோக இன்பங்கள் வெறுத்தேன்
இயேசுவே ஏற்றுக்கொள்ளும் – ஒப்புவிக்கிறேன்
3. இயேசுவுக்காய் யாவற்றையும்
ஒப்புவிக்கிறேன் இப்போ
இரட்சகரே முற்றும் என்னை
உம் சொந்தமாக ஆக்கும் – ஒப்புவிக்கிறேன்
4. இயேசுவுக்காய் யாவற்றையும்
ஒப்புவிக்கிறேன் இப்போ
அன்பினால் முற்றும் நிறைந்து
ஆசீர்வாதம் அருளும் – ஒப்புவிக்கிறேன்
5. இயேசுவுக்காய் யாவற்றையும்
ஒப்புவிக்கிறேன் இப்போ
பூரண இரட்சை அடைகிறேன்
தேவனுக்கே மகிமை – ஒப்புவிக்கிறேன்