
Yen Paarvai Oli Peravendum – என் பார்வை ஒளிபெற வேண்டும்
என் பார்வை ஒளிபெற வேண்டும்
உமைப்போல பார்த்திட வேண்டும்
என் நேசம் உயிர்பெற வேண்டும்
உமைப்போல நேசிக்க வேண்டும்
என் இயேசுவே என் பார்வையே
என் இயேசுவே என் நேசரே
நான் பார்த்திட ஒளியாவீரோ
நான் நேசிக்க மனம் வருவீரோ
உம் பார்வையில் ஏழையின்
காணிக்கை உயர்வாய் போனதே
உம் பார்வையில் பாவியின்
தாழ்ச்சி ஜெபமாய் ஆவதேன்?
உம் நேசத்தில் விழுந்தவர் கூட
எழுந்து நடப்பது ஏன்?
உம் நேசத்தில் அழுபவர் கூட
மகிழ்ந்து சிரிப்பது ஏன்?
உம் பார்வையின் பெயர் தான் இரக்கமோ?
உம் நேசத்தின் பெயர் தான் வலிமையோ?
உம் தேடலில் பாமரர்
தேவனின் அரசாய் ஆவதேன்
உம் பாதத்தில் பாவியின்
வீடும் உமதாய் ஆவதேன்
உம் வார்த்தையில் மாண்டவர் கூட
உயிர்த்து எழுவதும் ஏன்?
உம் பாசத்தில் வருந்துவோர் சுமையும்
எளிமை ஆவதும் ஏன்?
உம் தேடலின் முகம்தான் இரக்கமோ
உம் வார்த்தையின் வரம் தான் வலிமையோ