Yesu Enakkaai Piranthaarae – இயேசு எனக்காய் பிறந்தாரே
இயேசு எனக்காய் பிறந்தாரே
பாடிக் கொண்டாடிடுவேன்
என் இறைவன் எனக்காய் ஜெனித்தாரே
பாடி மகிழ்ந்திடுவேன்
அவர் அதிசயமானவரே
அவர் ஆலோசனைக் கர்த்தரே
வல்ல தேவன் நித்யப்பிதா சமாதானப் பிரபு
மண்ணில் பிறந்தாரே
பிறந்தாரே உலகினிலே அடிமையின் ரூபம் கொண்டார்
துறந்தாரே தன் மகிமைதனை குடிலினில் வந்துதித்தார்
விண்தூதர் சூழ்ந்து பாடிடவே வான சாஸ்திரிகள் வந்து பணிந்தனரே
விண்ணை விட்டு மண்ணில் பிறந்தார்
இழந்த என்னை மீட்டிடவே இகமதில் இணைந்தாரே
தொலைந்த என்னை சேர்த்திடவே தொழுவத்தில் தோன்றினாரே
என் பாவம் யாவும் நீக்கிடவே இப்பாரினில் அவர் பிறந்தாரே
எனக்காய் பிறந்தாரே