Yesu Nasaraiyi nathipathiyae – யேசு நசரையி னதிபதியே
Yesu Nasaraiyi nathipathiyae – யேசு நசரையி னதிபதியே
பல்லவி
யேசு நசரையி னதிபதியே – பவ நரர்பிணை யென வரும்
அனுபல்லவி
தேசுறு பரதல வாசப் பிரகாசனே
ஜீவனே அமரர் பாலனே மகத்துவ – ஏசு
சரணங்கள்
1. இந்த உலகு சுவை தந்து போராடுதே
எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே
தந்த்ர அலகை சூழ நின்று வாதாடுதே
சாமி பாவியகம் நோயினில் வாடுதே
2 .நின் சுய பெலனல்லால் என் பெலன்
ஏதுநினைவு செயல் வசனம் முழுதும் பொல்லாது
தஞ்சம் உனை அடைந்தேன் தவற விடாது
தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும்
3.கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும்
கேடு பாடுகள் யாவையும் தீரும்
பொறுமை நம்பிக்கை அன்பு போதவே தாரும்
பொன்னு லோகமதில் என்னையும் சேரும்