Yesu Rajan Pirandhare christmas song lyrics – இயேசு ராஜன் பிறந்தாரே
Yesu Rajan Pirandhare christmas song lyrics – இயேசு ராஜன் பிறந்தாரே
இயேசு ராஜன் பிறந்தாரே பிறந்தாரே
நமக்கு பாவத்தை மன்னிக்க பிறந்தார் -2
மனிதனை மீட்கவே மீட்பர் வந்தாரே
இரட்சிப்பை தந்தாரே
அல்லேலூயா பாடி இயேசு பிறப்பை எண்ணி துதித்திடுவேன் -2
(1)அதிசயமானவர் அவர் செயல்களில் வல்லவர்
நித்திய பிதா அவர் நித்தம் மாறாதவர் -2
நன்மை செய்பவர் நம்பிக்கையானவர்
உன்னை உயர்த்திடும் தேவன் அவர் -2 –
அல்லேலூயா பாடி இயேசு பிறப்பை எண்ணி துதித்திடுவேன் -2
(2)வல்லமையுள்ளவர் அவர் என்றென்றும் மாறாதவர்
நம்மோடு வாழ்பவர் அவர் இம்மானுவேலரே -2 கிருபையளிப்பவர் சமாதானம் தருபவர்
என்றும் மாறாத தேவன் அவர் –
அல்லேலூயா பாடி இயேசு பிறப்பை எண்ணி துதித்திடுவேன் -2