Yesu Swami Arul Natha – இயேசு சுவாமி அருள் நாதா

Deal Score0
Deal Score0

1. இயேசு சுவாமி அருள் நாதா!
கெஞ்சிக் கேட்கிறேன்;
பாவி யெனைக் கைவிடாமல்
சேர்த்துக் கொள்ளுமேன்!

பல்லவி

இயேசு சுவாமி!
கெஞ்சிக் கேட்கிறேன்;
பாவி யெனைக் கைவிடாமல்
சேர்த்துக் கொள்ளுமேன்!

2. கெஞ்சினோர் அநேகர் பேரில்
தயை காட்டினீர்
எந்த நீசன் அண்டினாலும்
தள்ளவே மாட்டீர்! – இயேசு

3. தீய குணம் கிரியை யாவும்
முற்றும் வெறுத்தேன்;
நீரே தஞ்சமென்று நம்பி
வந்து நிற்கிறேன் – இயேசு

4. தூய ரத்தத்தாலே என்னை
சுத்தமாக்குவீர்
வல்ல ஆவியால் எந்நாளும்
காத்து ஆளுவீர்! – இயேசு

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo