இயேசுவை அன்றி வேறொரு ரட்சகர் – Yesuvai Antri Veroru Ratchakar

Deal Score+2
Deal Score+2

இயேசுவை அன்றி வேறொரு ரட்சகர்  – Yesuvai Antri Veroru Ratchakar

பல்லவி

இயேசுவை அன்றி வேறொரு ரட்சகர்
காசினி தனிலுண்டோ, மனமே?-அவர்
நேசமறிந்து விசுவாசம் இல்லாமலே,
மோசம் போவதேன், மனமே?

சரணங்கள்

1. ஆதம் ஏவை செய்த பாதகம் தொலைந்திடப்
பூதலம் வந்ததார், மனமே?-கொடும்
யூதர்களால் பல வாதைகள் கொண்டு திவ்ய
போதகம் செய்ததார், மனமே? – இயேசு

2. இந்த வாழ்வு கன நிந்தை என்றுனது
சிந்தை தெளிந்திருந்தும், மனமே-ஐயோ!
பந்த பாசமதில் நொந்து நாள் தோறும் 
அலைந்து திரிவதேன், மனமே? – இயேசு

3. பூதல மீதினில் ஓதரி தாம் பரஞ்
சோதியைப் போற்றிசெய் மனமே;-செய்தால்
பாதகம் போய் மோட்ச சாதகம் ஆமென்று
வேதமுரைக்குதல்லோ மனமே? – இயேசு

Yesuvai Antri Veroru Ratchakar song lyrics in english

Yesuvai Antri Veroru Ratchakar
Kaasini thanilundo Manamae Avar
Neasamarinthu Visuvaasam Illamalae
Mosam Povathean Manamae

1.Aatham Yeavai Seitha Paathagam Tholainthida
Boothalam Vanthaar Manamae Kodum
Yuthargalaal Pala Vaathaigal Kondi Dhiya
Pothagam Seithathaar Manamae

2.Intha Vaaluv Kana Ninthai Entrunathu
Sinthai Thealinthirunthum Manamae Aiyo
Pantha Paasamathil Nonthu Naal Thorum
Alainthu ThiriVathean Manamae

3.Boothal Meethinil Oothari Thaam Param
Sothiyai Pottri Sei Manamae Seithaal
Paathagam Poai Motcha Saathagam Aamentru
Vedhamuraikkuthallo Manamae

 

சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்.
Unto the pure all things are pure: but unto them that are defiled and unbelieving is nothing pure; but even their mind and conscience is defiled.
தீத்து : Titus:1:15

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo