Yesuvuku Jai Tamil Christmas song – இயேசுவுக்கு ஜே
Yesuvuku Jai Tamil Christmas song – இயேசுவுக்கு ஜே
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
சந்தோஷமாக கொண்டாடுவோம்
இயேசு பிறப்பின் மேன்மை உலகறிய
சரித்திர நாயகன் அவரை சொல்ல
சாற்று பறைசாற்று
சத்தியத்தை பறைசாற்று
ஆடு கொண்டாடு
இயேசுவின் நாமத்தை கொண்டாடு
இயேசுவுக்கு ஜே
அவர் நாமத்துக்கு ஜே
Dark ah தான் போச்சு வாழ்க்கை பாவத்தினால
Bright ahதான் மாறுச்சு
என் இயேசுவினால
இருளான உலகத்தை வெளிச்சமாக்க
ரட்சகராய் மண்ணில் உதித்தாரே
பாவத்தின் பரிகாரம் செய்திடவே
பலியாக பாரினில் பிறந்தாரே
இந்த செய்தி நல்ல செய்தி
Woldkku சொல்ல
இயேசு பிறப்பக் கொண்டாடுவோம்
கிறிஸ்மஸ் பேருல
சாற்று பறைசாற்று
சத்தியத்தை பறைசாற்று
ஆடு கொண்டாடு
இயேசுவின் நாமத்தை கொண்டாடு
எல்லாமே முடிஞ்சதுன்னு கவலைப்பட்டு ஒதுங்காத
தோல்விய பாத்து நீயும்
தலைகுனிந்து போகாத
தடைகள் இருக்குதுன்னு
தயங்கி போய் நிக்காத
தலை நிமிர்ந்து நீ நடந்தால்
தலை வணங்கும் சரித்திரம்
உன்னை வாழ வைக்க
மண்ணில் பிறந்தார் கடவுள் தான்
அந்த கடவுள் இயேசுதான்னு
நம்பி பாரு வெற்றி தான்
இயேசுவுக்கு ஜே
அவர் நாமத்துக்கு ஜே