எது வேண்டும் சொல் நேசனே – Yethu Vendum Sol Nesanae

Deal Score+2
Deal Score+2

எது வேண்டும் சொல் நேசனே – Yethu Vendum Sol Nesanae

பல்லவி

எது வேண்டும், சொல், நேசனே,-உனக்
கெதுவேண்டாம், என் நேசனே?

சரணங்கள்

1. மதிவாட, மனம்வாட, மயக்கங் கண் ணிறைந்தாட
மதுபான முண வேண்டுமோ?-அன்றித்
துதிபாடும் உலகோருன் புகழ்பாடி மகிழ்ந்தாடச்
சுத்த ஜலம் வேண்டுமோ? – எது

2. வாதாடி நகையாடி, வழிகளில் விழுந்தாடி
மதுவுண்டு கெடவேண்டுமோ?-அன்றித்
தாதாவே, கனவானே, தனவானே யெனச் சாற்றத்
தண்ணீ ருண்ண வேண்டுமோ – எது

3. பகைதந்து, பழிதந்து, பரியாசந் தரு மது
பான முண வேண்டுமோ?-அன்றித்,
தகை கொண்ட கதியேற, அருளொடு புகழ்பெறத்
தண்ணீ ருண்ண வேண்டுமோ? – எது

4. சண்டை, காயம், கந்தை, அமளி, வேதனையாதி
தருங் குடி வெறி வேண்டுமோ?-அன்றிப்
பண்டை வேதஞ் சொன்னபடி மோட்சம் பெற ஜல
பானமது வேண்டுமோ? – எது

5. இரத்தக்கண், பெருந்துக்கம், ஏக்கம், நடுக்கம், வெட்கம்,
இவைதருங் குடி வேண்டுமோ?-அன்றித்,
திரத்துக்கும் அறிவுக்குஞ் சுகத்துக்கு மிடமான
தெளிந்த தண்ணீர் வேண்டுமோ? – எது


Yethu Vendum Sol Nesanae song lyrics in English

Yethu Vendum Sol Nesanae Unakethu
Veandaam En Neasanae

1.Mathivaada Manam Vaada Mayakkam Kannirainthaada
Mathubaana Muna Veandumo Antri
Thuthi Paadum Ulakorun Pugalpaadi Magilnthaada
Suththa Jalam Vendumo

2.Vaathaadi Nagaiyaadi Vazhikalil Vilunthaadi
Mathuvundu Keadaveandumo Antri
Thathavae Kanavnae Thanavanae Yena Sattra
Thanneerunna Vendumo

3.Pagaithanthu Pazhithanthu Pariyasam Tharumathu
Paana Muna Vednumo Antri
Thagai Konda Kathiyeara Arulodi Pugal Pera
Thanneerunna Veandumo

4.Sandai Kaayam Kanthai Amali Vedhanaiyaathi
Tharum kudi Veri Vendumo Antri
Pandai Vedham Sonnapadi Motcham Pera Jala
Paanamathu Vendumo

5.Raththakkan Perunthukkam Yeakkam Nadukkam Vetkkam
Evai Tharum Kudi Vendumo Antri
Thirithukkum Arivukkunj Sugaththukku Midamaana
Thealintha Thanneer Vendumo

 

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo