ஆனந்தமாய் நம் தேவனை – Anandamai Nam Devanai
ஆனந்தமாய் நம் தேவனை – Anandamai Nam Devanai
ஆனந்தமாய் நம் தேவனை
கீதங்கள் பாடி துதித்திடுவோம்
தொழுவோம் பணிந்திடுவோம்
அவர்தான் பாத்திரரே
மகிமையும் வல்லமை
கனத்திற்கு பாத்திரர்
சகலமும் சிருஷ்டி தேவன்
அதிபதி இயேசுவே
பரிசுத்தர் இயேசு பரிசுத்தர்
பாத்திரர் இயேசு பாத்திரரே
ஒளிதரும் கண்களோ
சுடர்தரும் பாதங்கள்
பெரு வெள்ள இரைச்சல் சத்தம்
வலக்கரம் வல்லமை
சிறந்தவர் அழகில் சிறந்தவர்
துதிகளை செலுத்தி துதித்திடுவோம்
ஜீவன்கள் மூப்பர்கள்
தூதர்கள் யாவரும்
பணிந்திடும் தேவன் நீரே
பரிசுத்தர் இயேசுவே
ஆவியில் நிறைந்து தொழுகுவோம்
ஆண்டவர் இவரை பணிந்திடுவோம்