ஆவியை மழைபோலே ஊற்றும் – Aaviyai Malaipolae Oottrum

Deal Score+1
Deal Score+1

ஆவியை மழைபோலே ஊற்றும் – Aaviyai Malaipolae Oottrum

பல்லவி

ஆவியை மழைபோலே ஊற்றும் – பல சாதிகளை
இயேசு மந்தையிற் கூட்டும்

அனுபல்லவி

பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்துவே
பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும்

சரணங்கள்

1. வருகையின் நாள் கிட்டிடுதே – துஷ்ட
மாறாட்டக்காரரின் கொடுமை மிக்குதே;
ஐந்து காயத்தில் அடைக்கலத்தைப் பெற
எந்தையே பாவியை ஏவி எழுப்பிட – ஆவி

2. அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவி
அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்;
துன்மார்க்கன் பாவத்தை முற்றாக வெறுத்து
சன்மார்க்கர் பாதையில் சான்றோனாய்ச் செல்ல – ஆவி

3. சாத்தானின் கோஷ்டம் அதிகம் – அவன்
தந்திர குணங்களின் சேஷ்டை அதிகம்;
கர்த்தன் கிறிஸ்துவின் திருக் கரத்தாலே
கலகக் குணங்களை ஒழிந்திடச் செய்யும்! – ஆவி

4. இரட்சண்ய கீதங்கள் பாட – எங்கும்
இரட்சண்ய மூர்த்தியைப் பாவிகள் தேட
பக்தி வைராக்கியத்தால் நிறைந்து போர் செய்ய
பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும்! – ஆவி

Aaviyai Malaipolae Oottrum song lyrics in english

Aaviyai Malaipolae Oottrum – Pala Saathikalai
Yesu Manthaiyir Koottum

Paavikkaai Jeevanai Vitta Kiristhuvae
Parinthu Neer Peasiyae Irangida Seiyum

1.Varukaiyin Naal Kittiduthae – Thusta
Maaraattakkaararin Kodumai Mikkuthae
Ainthu Kaayaththil Adaikalaththai Peara
Enthaiyae Paaviyai Yeavi Ezhuppida

2.Anbinaal Jeevanai Vitteer – Aavi
Arul Maari Pozhiyavae Paralokam Senteer
Thunmaarkkan Paavaththai Muttaaka Vearuththu
Sanmaarkkar Paathaiyil Saantronaai Sella

3.Saaththaanin Koostam Athikam – Avan
Thanthira Gunankalin Seastai Athikam
Karththan Kiristhuvin Thiru karaththaalae
Kalaka Gunankalai Ozhinthida Seiyum

4.Ratchanya Geethangal Paada- Engum
Ratchanya Moorthiyai Paavikal Theada
Bakthi Vairaakkiyaththaal Nirainthu Poor Seiya
Parisuththa Aaviyin ArulMaari Oottrum

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias - Best Tamil Christians songs Lyrics
      Logo